2009 மார்ச் முடிவில் நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் 2,221.9 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டுப் பண்ட உற்பத்தியின் 22 சதவீதமாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2008-09ல் நாட்டின் கடன் 530 கோடி (2.4 சதவீதம்) டாலர் அதிகரித்தது. வர்த்தக நிலுவையே இதன் பிரதான காரணமாகும்.
2009 மார்ச் முடிவில் நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்புகள் வெளிநாட்டுக்கடனின் 109.6 சதவீதத்திற்குப் பாதுகாப்பு அளித்தன. (2008 மார்ச் முடிவில் இது 137.9 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது)
அதிகக்கடன்பட்டுள்ள 20 நாடுகளின் வெளிநாட்டுக்கடன் பற்றிய சர்வதேச மதிப்பீட்டில் 2007ல் இந்தியா அதிகக் கடன்பட்டுள்ள 5வது நாடாக இருந்தது.
கடன் செலுத்தப்படும் தகவு கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து, 2009 மார்ச் முடிவில் 4.6 சதவீதமாக இருந்தது. 2008 மார்ச் முடிவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அந்நியக்கடன் ரூ.1870 கோடி டாலர் அதிகரித்துள்ளது ஆனால் swiz bank இல் இருக்கும் தமிழ்நாட்டு புள்ளிகள் இல்லை இல்லை கரும் புல்லிகல்லின் பணம் மட்டும் 64 லட்ச கோடி என்ன கொடிமை இது .
புலம்பியது : ச.சத்தியதாஸ்

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்