fb

எஸ்.எம்.எஸ் மூலம் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் வாங்க



 பல  தொலைக்காட்சிகளிலே இப்போ எதற்கு எடுத்தாலும்  எஸ். எம்.எஸ் போட்டி என்று வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதற்கு எடுத்தாலும் எஸ்.எம்.எஸ் போட்டிதான்.

நம்ம வலைப்பதிவிலே எப்படி எஸ்.எம்.எஸ் மூலம் உழைக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சில உருப்படாத ஆலோசனைகள் உங்களுக்காக.

1 . முதலில் நாங்கள் தொலைபேசி சேவை வழங்குகின்ற நிறுவங்களோடு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

2 . எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தமது கருத்துக்களை அனுப்ப வேண்டும். நல்ல கருத்துக்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும் என்று சொல்லலாம். பரிசு  பெறுவதற்காக பலர் வலைப்பதிவை பார்க்க வருவார்கள்.

3 . வலைப்பதிவில் குறிப்பிட்ட நேரங்களுக்கு சில கேள்விகளை வெளியிடலாம் அந்த நேரத்தில் சரியான பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

4 . குறிப்பிட்ட இடுகைகள் திரட்டிகளில் எத்தனை வாக்குகள் பெறும் என்று போட்டி  வைக்கலாம்.

5 . அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

6 . தினமும் குறிப்பிடப் படுகின்ற நேரத்தில் வெளியிடப்படுகின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகின்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

குறிப்பிட்ட நேரம் என்பது ஒவ்வொரு மணித்தியாலத்திலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கேள்விகளை வெளியிடலாம். இதனால் வாசகர்கள் தொடர்ச்சியாக எமது வலைப்பதிவிலேயே குடியிருப்பர்.

7 . யார் அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று அறிவிக்கலாம்.

8 . திரைப்படங்கள் வெளிவருகின்ற போது. பதிவர்களால் இடுகையிடப்படுகின்ற திரைவிமர்சனங்களில் பத்து திரைவிமர்சனத்தை தெரிவு செய்து. எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிப்பு நடாத்தலாம். இதேபோல் கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புக்களுக்கும் செய்யலாம்.

9 . இடுகைகளுக்கு தலைப்பினையும், குறிப்புக்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புவோரில் நல்ல தலைப்புக்களை அனுப்புவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.  அவர்கள் அனுப்புவதை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை.

10 . என்ன இவ்வளவுக்கேல்லாம் பெறுமதிமிக்க பரிசுகளுக்கு எங்கே போவது என்று யோசிக்கிறிங்களா? கவலைய விடுங்க. நாங்களே  போலியான பெயர்களோடும், இடங்களோடும் பரிசுக்குரியவர்களை உருவாக்கி அறிவிப்போம். இதெல்லாம் இப்போ சகஜமப்பா...

நீங்களும் ஆலோசனைகளை சொல்லுங்கள்....
(இது நகைச்சுவைப் பதிவு என்று மட்டும் சொல்லமாட்டேன்)

நன்றி : http://shanthru.blogspot.com/2010/07/blog-post_09.html 

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்