fb

மறந்துபோன மானுடம்





தில்லியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் பிரதான சாலையான ரிங் ரோடில் ”ரஜோரி கார்டன்” பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மேம்பாலம். நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டிருக்கும் இந்த சாலையின் ஓரத்தில் ஒரு பெண்ணின் சடலம். அதைச் சுற்றி காக்கிச் சட்டை காவலர்கள்.

அந்த பெண்மணிக்கு முப்பது-முப்பத்தைந்து வயதிருக்கலாம். அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் சிகப்பு நிறமாக மாறியிருந்தது. முகம் அடையாளம் உருத்தெரியாத அளவிற்கு நசுங்கி இருந்தது. உடலும் பல இடங்களில் பிய்ந்து தொங்கிக் கொண்டு இருந்தது.

முதல் முறை அடிபட்டு விழுந்தது எப்போது என்று தெரியாமல், மூன்று மணி நேரமாக அந்த வழியே சென்ற பல வாகனங்கள் அப்பெண்ணின் உடலை சாலையோடு சாலையாக நசுக்கி விட்டுச் சென்றிருக்கிறது. எந்த ஒரு வாகன ஓட்டிக்கும் தனது வாகனத்தை நிறுத்தி என்ன ஆயிற்று என்று பார்க்கக் கூடத் தோணாமல் சடலமான அப்பெண்ணின் மேல் மேலும் மேலும் வண்டியை ஓட்டிச் செல்லும் எண்ணத்தைத் தந்தது எது? அடிபட்டு விழுந்த உடனே யாராவது நின்று முதலுதவி செய்திருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாலோ ஒரு வேளை அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.

இப்போதெல்லாம் தில்லி போன்ற பெரு நகரங்களில் மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை. இது போன்ற நிகழ்ச்சி நடப்பது புதிதும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் கூட காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு 80 வயது முதியவர் மீது வாகனம் முட்டி கீழே விழ அவருக்கு உடனே முதலுதவி அளிக்காமல் விட்டதால் அந்த முதியவர் இறந்த சம்பவம் நடந்ததும் நினைவுக்கு வருகிறது.

காவல்துறையிலிருந்து தொந்தரவு வரும் என பயந்தோ, நமக்கு எதற்கு வீண்வம்பு என்றோ எல்லோரும் இது போன்ற விபத்து நேரும் இடங்களில் தொலைவில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக மாறி விட்டனர்.

ஊர், பேர் தெரியாத அப்பெண்ணைப் பற்றி சில நாட்களில் நாம் மறந்து விடுவோம். அடுத்த செய்தி என்ன என்ற அலைதலோடு பத்திரிக்கைகளும் இந்த விஷயத்தினை விட்டு விடுவார்கள்.

எங்கே போனது நமது மானுடம்? பறவைகள் கூட மற்ற ஒரு பறவைக்கு அடி பட்டு விடும் போது பதறிப் போய் குரல் கொடுத்துத் தவிக்கின்றன. ஆனால் ஆறறிவு பெற்றதாக பெருமை கொள்ளும் மனிதன் மட்டும் மானுடத்தை மறந்து விட்டது ஏனோ?

நன்றி :  http://venkatnagaraj.blogspot.com/2010/06/blog-post_09.html

வாங்க முன்னேறலாம்- நம்மை பின்னிழுக்கும் ஆமை


பாராட்டு நாணயத்தின் ஒரு பக்கமென்றால் அதன் மறு(எதிர்) பக்கம்  பொறாமை.

உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா? உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?

இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.

மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?


ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில்  ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா? 


இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய  உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.


உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?

முதலில் அந்த தீய எண்ணங்கள்  உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும். 

அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும். 

"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.

அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)

ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.

மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது. 

வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.  

*************

பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.

பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.

பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.

ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன். 
 
 


மனதிடமில்லாதவர்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்.

துரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்கம் இருந்தது. பத்தாண்டுக்கு முன், முத்தையாபுரத்தை சேர்ந்த அசன்மரக்காயர் மகள் சையது அலி பாத்திமாவிற்கும், எனக்கும் திருமணம் நடந்தது. பாத்திமா நஸ்ரின் என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளுக்கு முன், மனைவியை விட்டு பிரிந்தேன். தாயின் பாதுகாப்பில் மகள் உள்ளார். மனைவியை பிரிந்ததால், மனம் வருத்தப்பட்டேன். 

தனால், சமையல் வேலைக்கு செல்லவில்லை. என் மீது குடும்பத்தினர் வெறுப்படைந்தனர். எப்போதாவது வேலைக்கு சென்று, மது குடித்து வந்தேன். காசு இல்லாத நேரம் மனம் வருத்தப்படும். பட்டினியோடு திரிவேன். உடல் நிலை மோசமடைந்தது. எங்கள் ஊரை சேர்ந்தவர்கள், ஏர்வாடி தர்கா சென்றால், உடல் குணமாகும்; கெட்ட பழக்கம் மாறிவிடும் என்றனர்.

ரண்டாவது திருமணம்:ஐந்தாண்டுகளுக்கு முன், ஏர்வாடி சென்று தர்காவில் தங்கினேன். அங்கு தரும் உணவை சாப்பிட்டேன். ஒரு மாதத்திற்கு முன், என்னைப்போல் உடல் நிலை பாதிக்கப்பட்ட முத்தையாபுரத்தை சேர்ந்த, விவாகரத்து பெற்ற ரமீலாபீவி, ஏர்வாடி தர்காவிற்கு வந்தார். அவருக்கு பல உதவிகளை செய்தேன். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. தர்காவிலேயே, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஏர்வாடியில், 200 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம்.தர்காவிற்கு வருவோர் கொடுக்கும் காசுகளை சேகரித்து வந்தேன். அந்த வருமானத்தில் “சோமாஸ்’ செய்து, ரமீலாவிடம் கொடுத்து விற்று வரச்சொல்வேன். அதில் கிடைத்த வருமானத்தில் சாப்பிட்டோம். தலை பிள்ளையை கொன்று ரத்தத்தை எடுத்து ஒரு குழாயில் அடைத்தும், அந்த குழந்தையின் தலையை தனியாக எடுத்து, கடற்கரையில் புதைத்து வைத்து, ரத்தத்தை பூஜை செய்து கடலில் எறிந்தால் உடல் நிலை சரியாகும் என சிலர் சொல்ல கேட்டேன்.இது குறித்து ரமீலாவிடம் கூறினேன். அவரும், இதுபோல் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். சமயம் வரும்போது செய்வோம் என முடிவு செய்தோம். ஏர்வாடியில் சோமாஸ் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து, பல தர்காக்களுக்கு சென்று பாத்தியா ஓதி வந்தோம்.

ர்காவில் குழந்தை கடத்தல்:கடந்த ஜூன் 30ம் தேதி கோரிப்பாளையம் தர்காவிற்கு வந்தோம். அங்கு தங்குவதற்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காக, பணம் கட்ட வேண்டும் என்றனர். எனக்கும், ரமீலாவிற்கும் சேர்த்து தலா 150 ரூபாயை தர்காவில் செலுத்தினேன். தர்காவில் 41 நாட்கள் தங்கலாம் என்றனர். கடந்த ஜூலை 1ம் தேதி தங்கினோம். கைக்குழந்தையுடன், பெண்ணும், பாட்டி ஒருவரும் தர்காவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தக் குழந்தையை கடத்த திட்டமிட்டோம். இதற்காக, குழந்தைக்கு அருகிலேயே நாங்களும் படுத்துக் கொண்டோம்.இரவு 10 மணிக்கு தர்காவின் கதவுகளை பூட்டினர். அதிகாலை நான்கு மணிக்கு குழந்தை அழுதது. குழந்தைக்கு தாயார் பாலூட்டினார். பின், குழந்தையை படுக்க வைத்து, அருகிலேயே அவரும், பாட்டியும் படுத்துக் கொண்டனர். அதிகாலை 4.30 மணிக்கு பாங்கு சொல்லும் போது, கதவை திறந்தனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

குழந்தையை கொன்று நரபலி:மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

னது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
=========0000=========
 
நன்றி தினமலர்,தினமணி

மது குடிப்போர் உரிமைகள் மீட்பு விழா

குழந்தைகளின் கை கால்களை முறிப்பாங்களா...? கடவுளே!


பெர்னாட்சவ் வீட்டுக்கு ஒருநாள் ஒரு நகைகள் நையாண்டி கலைகளை சிறப்பாக பயின்ற பெண்மணி வந்திருக்கிறார், வந்தவர் பெர்னட்ஸ்வவின் அறையை பார்த்துவிட்டு ,

" செடி கொடிகள் மீதும் மிருகங்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டவர் எண்டு பேசுறாங்களே ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி கொடியையோ வளர்ப்பு மிருகங்களையோ காண வில்லையே.... "

என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு பெர்னட்சவ் சிரித்துக்கொண்டே ...........

"எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காக குழந்தைகளின் கை கால்களை முறித்து தொட்டிகளில் வைக்க முடியுமா? "

என்று கேட்டாராம்.

தி கிங் (சல்மான்)கான்

ஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும்?  100? 200? 500? ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக்கும் 33 வயது இளைஞர் சல்மான் கான். நேரில் அல்ல.  கணினி மூலமாக. இவரைப் பற்றி இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். khan academy என்ற பெயரில் ஒரு சிறிய கல்வி கூடமே இணையத்தில் இலவசமாக நடத்துகிறார். இவரது முயற்சியால் மாதம் 10 லட்சம் மாணாக்கர்கள் பயன் பெறுவதாக கூறப்படுகிறது. (10 லட்சத்தில் ஒருவன் ஹி ஹி)


1+1=2 என்பதில் இருந்து தொடங்கி laplace transform வரை, மிக எளிமையாக படிக்கும் மாணவனின் மனநிலைக்கு வந்து சொல்லி கொடுக்கும் விதம் மாணவனை பாடத்தோடு ஒன்றச்செய்கிறது. வியாபாரமாகி போன கல்விச்சூழலில் இலவசமாக மாணவர்களுக்கு இவர் செய்து வரும் தொண்டு விலைமதிக்க முடியாதது. அதற்கான அவர் உழைப்பு ஆச்சர்யப்படவைக்கிறது.

இதுவரை 1400 காணொளிகள் பாடங்களாக இவர் கொடுத்திருக்கிறார்.
இவரின் எளிமையான பாடங்களை  youtube வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து பயன்பெறுகிறார்கள்.

அனைத்து ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களுக்கு தெளிவாக புரியவைக்கமுடியவதில்லை. ஆதலால் கல்லூரியில் பாடத்தை கவனித்த பின் அதை இங்கே காணொளி மூலமாக காணும் போது இன்னும் தெளிவாவதாக மாணவர்கள் கூறியுள்ளனர். 10 நிமிட காணொளியில் சிறிய சிறிய சந்தேகங்கள் கூட நாம் கேட்காமலயே தெளிவாக்கி விடுகிறார்

தன் 33 வயதிற்குள் B.S in mathematics, B.S in electrical engineering, B.S in computer science, M.S. in electrical engineering, M.S in  computer science மற்றும் MBA வரை படித்திருக்கும் இவர் நான்கு வருடங்களுக்கு முன் தன் உறவினரின் குழந்தை கணக்கு பாடம் மிகவும் கடினமாக இருப்பதாக கூற, அக்குழந்தைக்கு கணக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தவர் தான்...... அதன் மூலம் கிடைத்த ஆதரவுகள் மற்றும் கடிதங்கள் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. வெறும் கணக்கு பாடத்திற்கு மட்டும் மாதம் கட்டணங்களை உருவும் ஆசிரியர்களுக்கிடையே இவர் இலவசமாக கற்றுக்கொடுக்க தொட்டிருக்கும் பாடங்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. Algebra, biology, physics, history, chemistry, linear algebra, trigonometry, arithmetic, pre calculus, statistics, geometry, probability, calculus, brain teasers, current economics, banking and money, finance, physics, differential equation இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எலக்ட்ரானிக் கரும்பலகை மூலம் இவர் நம் தோள்களுக்கு பின்னே பாடத்தை நடத்துவது ஒன்றும் இணைய உலகிற்கு புதிதானது அல்லவே. ஆனால் மாணவரை தன் பக்கம் ஈர்த்து பாடத்தின் மீது கவனம் கொண்டு வர இவர் செய்யும் எளிமையான வழிமுறைகளை கண்டு பல பல்கலை கழகங்களே மூக்கின் மேல் விரலை வைக்கின்றன.  பல பல்கலை கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களுக்காக இவரை உரையாற்ற அழைத்துள்ளனர்.

யூடியூப் தளம் கொடுத்துள்ள வெறும் 10 நிமிடங்களில் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு எளிமையாக கற்றுக்கொடுப்பது சவாலாக இருப்பதாக கூறும் இவர், வகுப்பறையில் மாணவர்களை திசைதிருப்பாமல் பாடம் எடுப்பதை போலவே இதுவும் கடினம் என்கிறார். ஆசிரியர் பணியை மிகவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். மேலும் ஆப்ரிக்க கண்டங்களில் இணைய வசதி கூட இல்லாத கிராமங்களுக்கு கல்வியறிவு அளிக்க சென்ற குழுக்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளார்.




இந்தியா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,வளைகுடா,இங்கிலாந்து என உலகம் முழுவதும் விரிந்துள்ள இவருடைய மாணவர்கள் இவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பேட்டிகளும், பின்னூட்டங்களும் கொடுத்துள்ளனர். வகுப்பறையில் கேள்வி கேட்க கூச்சப்படும் பல மாணவர்கள் இவரது தளத்திற்கு உடனடியாக சென்று தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்கின்றனர். மைக்ரோசாஃட் இவருக்கு Microsoft education award (tech) கொடுத்துள்ளது. இவர் ஒரு இந்திய வம்சாவளியாக இருப்பது கொஞ்சம் நமக்கு பெருமையளிக்க கூடியதாகவும் உள்ளது.

இது இவரின் தளம்





இந்தியாவின் வெளிநாட்டுக்கடன்


2009 மார்ச் முடிவில் நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் 2,221.9 கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டுப் பண்ட உற்பத்தியின் 22 சதவீதமாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2008-09ல் நாட்டின் கடன் 530 கோடி (2.4 சதவீதம்) டாலர் அதிகரித்தது. வர்த்தக நிலுவையே இதன் பிரதான காரணமாகும்.

2009 மார்ச் முடிவில் நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்புகள் வெளிநாட்டுக்கடனின் 109.6 சதவீதத்திற்குப் பாதுகாப்பு அளித்தன. (2008 மார்ச் முடிவில் இது 137.9 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்கது)

அதிகக்கடன்பட்டுள்ள 20 நாடுகளின் வெளிநாட்டுக்கடன் பற்றிய சர்வதேச மதிப்பீட்டில் 2007ல் இந்தியா அதிகக் கடன்பட்டுள்ள 5வது நாடாக இருந்தது.

கடன் செலுத்தப்படும் தகவு கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து சரிந்து, 2009 மார்ச் முடிவில் 4.6 சதவீதமாக இருந்தது. 2008 மார்ச் முடிவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் அந்நியக்கடன் ரூ.1870 கோடி டாலர் அதிகரித்துள்ளது ஆனால்  swiz bank இல் இருக்கும் தமிழ்நாட்டு  புள்ளிகள் இல்லை இல்லை கரும் புல்லிகல்லின் பணம் மட்டும்   64 லட்ச கோடி  என்ன கொடிமை இது .

புலம்பியது : ச.சத்தியதாஸ் 


சத்துணவில்லாமல் சாகும் குழந்தைகள்?



அரைகுறை மனதுடன் நிறைவேற்றப்படும் அங்கன்வாடித் திட்டத்தால், மத்தியப்பிரதேசத்தில், மே 2008லிருந்து இன்றுவரை, 6 வயதிற்கும் குறைவாக உள்ள 450 குழந்தைகள் இறந்து போயுள்ளன.

தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சத்துணவின்றி நோஞ்சானாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 54 சதவீதத்திலிருந்து 60 ஆக உயர்ந்துள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

இங்கு பெருமளவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு பெருகிவருகிறது. இம்மாநிலத்தில் இயங்கும் அங்கன்வாடித் திட்டப் பொறுப்பிலுள்ள அரசுத்துறையிடம் குழந்தைகளின் இறப்பு பற்றி விவரம் ஏதும் இல்லை.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுகுறித்த விவரம் கோரியதற்கு, இத்துறையிடம் இதுபற்றிய புள்ளிவிவரம் ஏதும் இல்லை எனக் கைவிரித்துள்ளது. அங்கன்வாடித் திட்டத்திலும், சத்துணவுத்திட்டத்திலும் உணவு மற்றும் சத்துணவு வழங்குவதில் பல முறைகேடுகள் உள்ளதாக அரசிற்கு தெரிவிக்கப்பட்டும் அரசு கண்டுகொள்வதாக இல்லை.

அரசுப் பள்ளி ஒனிறல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், செத்த எலியும், செத்த தவளையும் இருந்தது சமீபத்தில் கண்டயறிப்பட்டது. சத்துணவுத் திட்டத்தை எந்த லட்சணத்தில் மாநில அரசு செயல்படுத்துகிறது என்பதற்கு இதுஒரு சான்றாகும்.

மத்தியப் பிரதேசத்தில் ஐ.சி.டி.எஸ் அங்கன்வாடித் திட்டத்திற்கும் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா கிளைக்கும் 2007ல் ஒரு ஒப்பந்தமாகியிருந்தது. இதன்படி அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் மையச் செலவுத் தொகை, நேரிடையாக பாரத ஸ்டேட் வங்கி மூலமாக பணியாளர்கள் பெற்றுவந்தார்கள்.

தற்போது இவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முந்தைய நடைமுறையில் தவறுகள் ஏதும் அரசிற்கு வராமலேயே ஒப்பந்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது என யாருக்கும் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டதற்கு, அங்கன்வாடிப் பணியாளர்கள் கல்வியறிவற்றவர்களாய் உளளனர். வங்கிக் கணக்கை கையாளத் தெரியாதவர்களாய் உள்ளனர் என சாக்குப் போக்குச் சொல்லியுள்ளது அம்மாநில அரசு.

ஆனால் குழந்தைகளுக்கு உணவை வழங்குவதை தனியார் காண்ட்ராக்டரிடம் கொடுத்தது. அதில் பெருமளவு கொள்ளையடிக்கத்தான் எனக்கூறுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த ஒரு குழுவின் அறிக்கை உணவில் செத்த தவளை, செத்த எலி இருந்ததை கண்டுபிடித்து அரசிற்கு தெரிவித்த பின்பும், அரசு தனியார் ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து ஆணை வழங்கியுள்ளது.

அங்கன்வாடிப் பணியாளர்களின் தேவை மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஆகும். ஆனால் இப்போது பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 738. கடந்த ஆண்டு 9 ஆயிரம் பணியாளர்களை அரசு பணியிலமர்த்தியது.

இதிலும் பெருமளவில் லஞ்சம் பெற்றுள்ளனர் அமைச்சர்களும், அதிகாரிகளும். குழந்தைகள் வறுமையில் சாகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் வளமையில் கொளுக்கிறார்கள் என்பதுதான் அங்குள்ள நிலை.

நன்றி  : http://tvmalaionline.blogspot.com/


சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம்...!



வாழும் பூமி, 23.5 டிகிரி சாய்வாகச் சுற்றிக் கொண்டிருப்பது பற்றி நாம் பள்ளியில் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம். அவ்வாறு சாய்வான கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் தான், பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன என்பதும் நமக்குத் தெரியும்.
பூமியின் அந்த அச்சு, 23.5 டிகிரியைவிட அதிகமாகச் சாய்ந்தால் என்னவாகும்? என நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். பருவ காலங்கள் தடுமாறிப்போகுமல்லவா? ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொலவடைக்குப் பொருளில்லாமல் போகும்.
ஆடிக்காற்றில் அம்மி பறப்பதற்குப் பதிலாக, ஆடிக்காற்றே அடிக்காமல் போகும். ஆம்! பூமியின் குணாதியசங்களே முற்றிலும் மாறிவிடும். ஆலைகள் வெளியிடும் நச்சுக் காற்றால் புவி வெப்பம் அதிகமாகி, கடல் நீரின் பரிமாணம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு அதிகரிப்பதால், சில பகுதிகளில் எடைகளில் மாற்றம் ஏற்படாது என்று முன்பு கருதப்பட்டது ஆனால், பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பின், பூமியின் பகுதிகளில் எடை மாற்றம் ஏற்படலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
புவி வெப்பம் அதிகரிப்பதால், கடல் நீர் உஷ்ணமடைந்து; விரிவடைந்து கடைசியில் பூமியின் அச்சை 23.5 டிகிரிக்கும் அதிகமாகச் சாய்வடையச் செய்து கொண்டிருக்கிறது என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வடதுருவத்தின் அருகிலுள்ள கிரீன்லாந்து நாட்டின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால் அது புவி அச்சினை ஆண்டிற்கு 2.6 செ.மீ. தூரம் தளர்வடையச் செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இப்போதுள்ள அளவில் தொடர்ந்து நச்சு வாயுக்கள் வெளியிடப்பட்டு வருமானால், நூறாண்டுகளில் வெளியிடப்படும் கரியமில வாயுவின் அளவு இரண்டு மடங்காகும். அதனால் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, விரிவடையும் கடல் நீர் தாழ்வான நிலப்பரப்புகளில் புகுந்து விடும்.
தனுஷ்கோடி நகரைக் கடல் கொண்டதைப்போல, பரந்த நிலப்பரப்பு கடலுக்குள் சென்று விடும் அபாயமிருக்கிறது. இதுவரை நாம் கணித்திருந்ததைவிட, அறிந்திருந்ததைவிட அதிக அளவிலேயே புவி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சிந்தித்துப் பார்க்க...!

நன்றி  : http://tvmalaionline.blogspot.com/  

ஒரு பெண்ணின் கதறல்

நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் பொழுது பஸ்ஸில் சென்று வருவதுதான் பழக்கம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் பஸ் பயணம்தான். அந்த பயணங்களின் போது நிறைய அனுபவம் கிடைத்தது. சில அனுபவம் சுவாரஸ்யமானது, சிலவற்றை சொன்னால் ஆண்கள் கோபித்து கொள்வார்கள் என்று ஒரு தயக்கம் இருக்கிறது எனக்கு. நான் ஒரு சில ஆண்களை பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட போகிறேன். அவர்களில் பல வகைகள் இருகிறார்கள்.....அந்த கொடுமைகள் கீழே....


பள்ளியில் படிக்கும் பொழுது நான் ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவள், அதனால் பஸ்ஸில் ஏறியவுடனே டிரைவர் சீட்டின் அருகில் சென்று நின்று விடுவேன். அதுதான் பாதுகாப்பாக கருதினேன். அது உண்மையும் கூட.... ஏன் என்றல் பள்ளி, கல்லூரி விடும் நேரங்களில் மட்டும் சில மனித மிருகங்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஏறுவார்கள், பெண் பிள்ளைகள் நிற்கும் இடமாக பார்த்து வந்து நின்று கொண்டு, எங்கு படிக்கிறாய், அப்டி இப்டி என்று ஏதேதோ பேச்சி கொடுத்து கொண்டே தங்கள் கன்றாவி இச்சையை தீர்த்து கொண்டு, பஸ் எடுத்ததும் இறங்கி விடுவார்கள்.

ஒரு சில கொடிய மிருகங்கள், அருகிலேயே நின்று கொண்டு நம்மை நகர விடாமல் ஐயோ... கடவுளே இதற்கு மேல் என்னத்த சொல்றது. ஓரளவு நான் இவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். திரு திரு என்று முழித்து கொண்டு, எவ்ளோ கூட்டமாக இருந்தாலும் ஒரு கையாலேயே பேலனஸ் பண்ணிக்கொண்டு இன்னொரு கை என்ன பண்ணும் என்று நான் சொல்ல விரும்ப வில்லை, அவன் கண்ணில் பயம் தெரியும் இருந்தாலும் அவனால் ஒழுங்காக தள்ளி நிற்க முடியாது. நாம் போகும் இடம் வரை வந்து பீதியை கிளப்புவார்கள். எனக்கு அழுகையும், கோவமும் கலந்து வரும், இவர்களை எல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும் போல தோன்றும்.

இன்னும் சில எருமைகள், மாணவிகள் உட்கார்ந்து இருந்தால் அந்த சீட்டுக்கு அருகில் போயி நின்று கொண்டு........கொஞ்சம் நகர சொன்னால் காதில் விழாதது போல எங்கயோ பார்த்து கொண்டு இருப்பான். இது வரை நான் ஏராளமான சம்பவங்களை பார்த்து விட்டேன், ஒருத்தர் கூட அவர்களை கண்டிக்கவில்லை. பார்த்தாலும் பார்க்காதது போல இருந்து விடுவார்கள். எந்த பெண்ணும் அவர்களை எதிர்த்து எதும் பேசி நான் பார்த்ததில்லை.

ஒரு உண்மை என்னவென்றால் கல்லூரி மாணவர்களை கூட நம்பி அருகில் நின்று 100 கி.மீ. பயணம் செய்து விடலாம்,. ஆனால் ஒரு நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் சில ஆண்களை மட்டும் நம்பி ஒரு நிமிடம் கூட நிற்க முடியாது. இது எவ்ளோ உண்மை என்று பெண்களுக்கு நிச்சயம் தெரியும்.

இன்றும் நான் பஸ்சில் போகும்போது கவனித்திருக்கிறேன், சில குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இன்றைய பெண் குழந்தைகள் மிக சீக்கிரம் உடல் வளர்ச்சி அடைந்து விடுகிறார்கள். அதனால் நம் கண்களுக்கு குழந்தையாக தெரியும், ஆனால் "அதுங்களுக்கு"??????....


இதையெல்லாம் நிச்சயம் தடுக்க முடியாது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நிச்சயம் அவர்களை அருகில் அழைத்து எல்லாவற்றையும் சொல்லி தரவேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள்தானே? ஒரு நிமிடம் அப்படி நினைத்தால் இது போன்ற கொடுமைகள் நடக்காது. வெட்டு, குத்து, கொலை, குண்டு வெடிப்பு இப்படி நிறைய செய்திகள் படித்து உச்சி.. கொட்டி நாமும் வேதனையை தெரிவித்து விடுவோம். நானும்தான். ஆனால் இந்த கொடுமையை நான் நேரிலேயே பார்த்து, துடித்து இருக்கிறேன். என்னால் இன்றும் சிலவற்றை மறக்க முடியவில்லை. தினமும் செய்திதாளில் பார்த்தால், ஆசிரியரே மாணவியை கற்பழித்ததாக செய்திகள் நாள் தோறும் வந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கு தீர்வுதான் என்ன...?????

நன்றி :  http://sarveshhere.blogspot.com/

கோவில்களில் நடக்கும் அராஜகம்

                       இந்த புகைப்படத்தை பார்த்துடன் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் திருவண்ணாமலை கோவிலே மிக அற்புதமான கட்டிடகலை கொண்ட கோவில் அது மட்டும் இல்லாமல் உலக அளவில் பிரசித்திபெற்ற கோவில். சரி நானும் என் குடும்பத்தாரும் இந்த கோவிலுக்கு செல்ல நேர்ந்தது திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தவுடன்  கோவிலை அடைந்தோம் எல்லா கோவில்லை போன்றும் பிச்சைகாரர்கள் கூட்டம் மற்ற  கோவில்களை விட இங்கு  அதிகமாக அலைமோதியது.  இவர்களை கடந்து உள்ளே சென்றால் மிக அற்புதமான கட்டிடகலை கொண்ட உயர்ந்து த நிற்கும் சிறு சிறு கோவில்கள்  முதலில் இந்த சிறு தளங்களை தரிசித்துவிட்டிடிவோம்   என்று சென்றால் முதல் அதிர்ச்சி அங்கு உள்ள பூசாரிகள் தட்டில் ஒரு ரூபாய் போட்டால் கையில் விபுதியும் 5,10 என்றால் பாக்கெடில் பார்சல்  திருநீறும் தந்தனர்  என்ன கொடுமை இது .கோவிலா    இல்ல விற்பனை கூடமா இது போலவே மற்ற சிறு தளங்களும், இது சரி பட்டு வராது என்று கோபத்தில் பெரிய கோவிலுக்கு  சென்றால் அங்கு இதை விட பெரிய ஆதிர்ச்சி வெளியே போன்று உள்ளும் வரிசையில் நின்று வரிசையாக சென்று கொண்டு இருந்தேன் நான் தரிசிக்கும் இடத்தின்  அருகில் வரும் போது மிக  பெரும் ஆதிர்ச்சி காத்து கொண்டிருந்தது ஒருவர் கொலு கொலு என்று கொளுபிலே வளர்த்துள்ள அந்த சுமார் 20 - 25 வயது மதிக்க தக்க பூசாரி திருநீர் தந்து கொண்டிருதான்  அந்த பூசரீன்  தட்டில் 5 ரூபாய் வைத்தார் ஒரு வயது முதிர்த ஒருவர் அந்த பூசாரி  அந்த முதியவரை முறைத்து பார்த்துவிட்டு  அந்த 5 ரூபாயை மீண்டும் அந்த முதியவரிடமே கொடுத்து விட்டு என்ன இது  10 ரூபா தா என்று திமிராக கேட்டான் அந்த முதியவர் 10 ரூபாயை தனது வருத்த முகத்துடன் அந்த தட்டில் போட்டார் பின் ஏதோ வேண்டவெருபாக  திருநீரை தந்தான் இதை கண்டயுடன் அந்த பூசாரியை அங்கயே அரைந்து  விட வேண்டும் என்று       தோன்றியது என்ன செய்வது? எனது உறவினர்கள் என்னை தடுத்து   அவன் அருகில் கூட செல்லாமல்  ஊருக்கு   கிளம்பினோம் . இதில் அந்த பூசாரி மீது கோபபடுவதா ,இல்லை    அந்த பூசாரி தப்பு செய்கிறான் என்று தெரிந்தும் அவனுக்கு பணம் போட்ட அந்த முதியவரை சொல்வதா   இல்லை இதை எல்லாம் கண்டு விட்டு சும்மா இருந்த என்னை திட்டிகொல்வதா  இதை நினைக்கும் போதிலோ
எங்கே கடவுள் ? என்றே யோசிக்க வைக்கிறது. 
புலம்பியது  : ச  சத்தியதாஸ்

எஸ்.எம்.எஸ் மூலம் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் வாங்க



 பல  தொலைக்காட்சிகளிலே இப்போ எதற்கு எடுத்தாலும்  எஸ். எம்.எஸ் போட்டி என்று வைத்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதற்கு எடுத்தாலும் எஸ்.எம்.எஸ் போட்டிதான்.

நம்ம வலைப்பதிவிலே எப்படி எஸ்.எம்.எஸ் மூலம் உழைக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சில உருப்படாத ஆலோசனைகள் உங்களுக்காக.

1 . முதலில் நாங்கள் தொலைபேசி சேவை வழங்குகின்ற நிறுவங்களோடு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.

2 . எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தமது கருத்துக்களை அனுப்ப வேண்டும். நல்ல கருத்துக்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும் என்று சொல்லலாம். பரிசு  பெறுவதற்காக பலர் வலைப்பதிவை பார்க்க வருவார்கள்.

3 . வலைப்பதிவில் குறிப்பிட்ட நேரங்களுக்கு சில கேள்விகளை வெளியிடலாம் அந்த நேரத்தில் சரியான பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புபவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

4 . குறிப்பிட்ட இடுகைகள் திரட்டிகளில் எத்தனை வாக்குகள் பெறும் என்று போட்டி  வைக்கலாம்.

5 . அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

6 . தினமும் குறிப்பிடப் படுகின்ற நேரத்தில் வெளியிடப்படுகின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புகின்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

குறிப்பிட்ட நேரம் என்பது ஒவ்வொரு மணித்தியாலத்திலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கேள்விகளை வெளியிடலாம். இதனால் வாசகர்கள் தொடர்ச்சியாக எமது வலைப்பதிவிலேயே குடியிருப்பர்.

7 . யார் அதிகமாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று அறிவிக்கலாம்.

8 . திரைப்படங்கள் வெளிவருகின்ற போது. பதிவர்களால் இடுகையிடப்படுகின்ற திரைவிமர்சனங்களில் பத்து திரைவிமர்சனத்தை தெரிவு செய்து. எஸ்.எம்.எஸ் மூலம் வாக்களிப்பு நடாத்தலாம். இதேபோல் கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புக்களுக்கும் செய்யலாம்.

9 . இடுகைகளுக்கு தலைப்பினையும், குறிப்புக்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்புவோரில் நல்ல தலைப்புக்களை அனுப்புவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.  அவர்கள் அனுப்புவதை நாம் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை.

10 . என்ன இவ்வளவுக்கேல்லாம் பெறுமதிமிக்க பரிசுகளுக்கு எங்கே போவது என்று யோசிக்கிறிங்களா? கவலைய விடுங்க. நாங்களே  போலியான பெயர்களோடும், இடங்களோடும் பரிசுக்குரியவர்களை உருவாக்கி அறிவிப்போம். இதெல்லாம் இப்போ சகஜமப்பா...

நீங்களும் ஆலோசனைகளை சொல்லுங்கள்....
(இது நகைச்சுவைப் பதிவு என்று மட்டும் சொல்லமாட்டேன்)

நன்றி : http://shanthru.blogspot.com/2010/07/blog-post_09.html 

மூட நம்பிக்கையும் முட்டாள் ஜனங்களும்


கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. மகாலட்சுமி தனியாக கோவில் கொண்டுள்ளது இங்கு தான். இந்த அம்மனை 24 மனை தெலுங்கு செட்டியார்கள், குரும்ப கவுண்டர் ஆகிய இரு சமூகத்தினரும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் கோவிலில் ஆடி 18ல் துவங்கி இரண்டு நாட்கள் நடக்கும் ஆடிப்பெருக்கு விழாவில், பக்தர்கள் 18 நாள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்கள்.
                                                           
தலையில் தேங்காய் உடைத்ததில் 96 பேருக்கு மண்டை உடைந்தது. 26 பேருக்கு கோவிலில் அமைத்த மருத்துவ முகாமில், தையலிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுக்கு பெயர் தான் கபால  மோட்சம் சொல்லுவாங்க...


ஆலயங்களில் உயிர் பலி கொடுப்பது எவ்வளவு மூட நம்பிக்கையோ அது போல் காட்டுமிராண்டித்தனம் என்பது உண்மை. இந்த நவ நாகரீக உலகத்தில் இன்னமும் நாம் இப்படி நடந்துக்கொள்வது ஏற்புடையகாது. நமது புராணமும் இதை வரவேற்கவில்லை. ஆகவே இந்துக்களாகிய நாம் இந்து ஆலயங்களில் இனிமேல் பலி கொடுப்பதை நிறுந்த வேண்டும்.

சூரிய கிரகண மூட நம்பிக்கை;
சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதும் மூட நம்பிக்கைதான். சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைநமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது. 



                        சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் 










தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது.  பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது.






            
கழுதைக்கு கல்யாணம்…மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?


முடிந்தால் புலிக்கும் புலிக்கும் கல்யாணம் செய்து வையுங்கள்


இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
நன்றி :http://rasikan-soundarapandian.blogspot.com/2010/06/blog-post_9526.html

இந்திய இணைய உலவி


என்னடா கொஞ்ச நாள் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனான், ரெண்டு நாள் கூட ஆகல உடனே வந்துட்டான் அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது எனக்கு கேக்குது. நான் இவ்வளவு சீக்கிரம் வரக் காரணம், தானை தலைவி கீதா மாமிதான்,. ஆமா, அவங்க எழுதினா பதிவை பார்த்தப் பிறகுதான்  நான் இந்த எபிக் பிரௌசர் உபயோகப் படுத்த ஆரம்பித்தேன். உடனடியா ரொம்பப் பிடிச்சி போச்சுங்க.

இதில, ஒரு சைட் பார் ஒண்ணு இருக்கு . அதில் பல தரப்பட்ட வசதிகள் இருக்கு. நீங்க பிரபல சோசியல் நெட்வொர்கிங் தளங்களான ஆர்குட், முகப்பக்கம், ட்விட்டர் போன்றவற்றை ஒரே கிளிக்கில் உபயோகிக்கலாம். மேலும் அவை உலவியின் முக்கிய இடமான வலது பக்கம் வருவதில்லை. இடது பக்கம்  சின்னதாக  வருகிறது. எனவே மற்றவர்களுக்கு தெரியாமல் ஆர்குட் போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு  இது ஒரு வசதி.

மேலும்,இந்த இணைய உலவியில் இருந்தே, நீங்கள் உங்க கணிப்பொறியில் இருக்கும் கோப்புகள் படங்களை உபயோகிக்கலாம். அதற்கு இதில் இருக்கும் my computer பட்டனை கிளிக்கினால் போதும்.

மேலும், இலவச இணைப்பாக , ஒரு ஆன்டி வைரஸ் கொடுத்துள்ளனர். இதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இணைய உலவியில் இருந்தவாறே இதை இயக்கி, வைரஸ உள்ளதா எனக் கண்டறியலாம்.

மேலும், உலவியில் நீங்கள் பலதரப்பட்ட ஸ்கின்களை உபயோகித்துக் கொள்ளலாம். இந்தியாவை சேர்ந்த பல புகழ் பெற்ற நபர்களின் புகைப் படங்கள் உள்ளன.(திருவள்ளுவர் உட்பட). மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இணைத்துள்ளனர். enable indic dropdown விருப்பத்தை தேர்வு செய்து விட்டாள், எல்லாத் தளங்களிலும் நீங்கள் விரும்பும் மொழியில் தட்டச்சு செய்துக் கொள்ளலாம். .






இதை நீங்கள் உபயோகிக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியத் தளம் http://www.epicbrowser.com

 நன்றி: http://lksthoughts.blogspot.com/2010/07/blog-post_18.html

வானமும் எல்லை இல்லை


 நாசாவில் எடுக்கபட்ட படங்கள்






 

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...



Real Face !!!



Reeeeeel Face !!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!



தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் ( Rajeev Menon) ஒரு க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

சமூகத்திற்கான படங்கள்




















இந்தியனாக இருப்போம்

நண்பர்களே நமது பாட  புத்தகங்கள் முதல்  இதழ்கள் வரை வெளிநாட்டவரின் புகைப்படத்தையே பெரும்பாலும் பயன்படுத்திகின்றோம்.இதற்கு முக்கிய காரணம் இணைய தளங்களில் பெரும்பாலும் வெளிநாட்டவரின் புகைப்படமே கிடைக்கிறது. இதனால் நமது சமுக கலாசரம்  அழிந்து வருகிறது.இந்த பிரச்சினைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது அது கப்புரிமை.இதை தகர்க்க நீங்கள் ஒத்துழைத்தல் முடியும். உங்களிடம் உள்ள இந்திய புகைப்படங்களை காப்புரிமைவுடன் இந்த தளத்திலோ அல்லது எனது மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்புங்கள் அந்த புகைப்படம் இந்த வலைபூவிலும் மற்ற நண்பர்களுடனும் பகிர்துகொள்ளபடும்.இதில் முதல் முயற்சியாக எனது இந்திய புகைப்படங்களை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி என்றும்
உங்கள் நண்பன்
ச.சத்தியதாஸ்.   

 

புனித தளங்களை காப்பாற்றுவது யார் ?

 
சகல நோய்கள் தீர்க்கும் சமயபுரத்தாள்
சகல பாவங்களையும்  போக்குவால் சமயபுரத்தாள்
சமயங்களை கடந்தவள்  சமயபுரத்தாள்
                   காலம் காலமாக  வலியினை  போக்கிய சமயபுரத்து அம்மன்  கோவிலை சுற்றிபார்போமா?
                        பக்தர்களுகாக  இருக்கும் குடிநீர் தொற்றியை சுற்றியும் கால்நடை கழிவுகளும் 
மனித கழிவுகளும் இது போதாதென்று கால்நடையோடு  குடிநீருக்கு  மனிதனும்  ட்டி  போடவேண்டும்  சரி  ஒரு வழியாக முடி எடுக்க சென்றால் தலையில் இருக்கும் முடி  தரையெங்கும் சிதறி கிடக்கிறது . முடிதனே என முடியெடுத்து குளிப்பதற்கு ஆறுக்கு சென்றால் ஐயகோ ஆறா அது? மனிதர்களின் கழிபிடமும் அதுதான் குளிபிடமும்ஆதுதான் குடிபிடமும்  அதுதான் ,
 நோய்   தீர்க்கும் புண்ணிய தீர்தமும்   அதுதான்  !!   
        அம்மைவந்தாலும், காலரா வந்தாலும் காப்பாற்றுவதும் சமயபுறதாள்   தான் அன்று   இன்று சமயபுரதம்மனையும் சேர்த்து  காப்பாற்றுவது யார்?
                          எங்கள் புனித தளங்களை காப்பாற்றுவது யார் ?

லஞ்சம் வாங்க.. புது டிப்ஸ் ரெடி

தேவையானப் பொருட்கள்: 100 கிராம் கடலைமாவு 50 கிராம் சர்க்கரை பெரியளவு பீட்ரூட் ஒரு பாக்கெட் பிஸ்கெட் ஒரு டம்ளர் நல்லெண்ணெய் தேவையான அளவு உப்பு லஞ்சம் வாங்கும் நாட்களில் குளித்து சுத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் இரண்டு விரல்களில் வாங்கவும் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும். சீக்கிரமாக பணத்தை எண்ணக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரைப் பார்த்தவுடனே அவரின் பாக்கெட்டின் மதிப்பை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முகத்தை கோபமாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டும் மோடிவித்தை பழகிக்கொள்ளுங்கள். பொதுவாக வாங்கப்படும் பணத்தை கையில் வாங்க வேண்டாம், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு பையில் உள்ளதை வீசி உங்களுக்கு விசுவாசமாக ஆக்கிக் கொள்ளங்கள். இப்போது டிப்ஸ்... காலையில் எழுந்தவுடன் அரை டம்ளர் எண்ணையை உடம்பில் தேய்த்துக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்). மிகவும் மிடுக்கான அழகான சால்வைக்கு பதில் கொஞ்சம் அழுக்கான சால்வையை தயார்படுத்திக் கொள்ளவும். பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு நன்கு வெட்டிக்கொள்ளவும். புதியதாக வாங்கி வந்த 100 கிராம் கடலைமாவை நன்கு சலித்து எடுத்துக்கொள்ளவும். சர்க்கரையில் கலப்படமாகியுள்ள உள்ள ரவையை நேர்த்தியாக நீக்கி தயார்படுத்தவும். இப்போது அடுப்பை பற்றவைத்து வாணலியை அடுப்பில் வைக்கவும் (முக்கிய குறிப்பு : போலி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தினால் விபத்துக்கள் நேரலாம்) வாணலி பாத்திரம் கட்டாயம் கைபிடியில்லாமல் இருக்க வேண்டும். பாத்திரம் சுடானவுடன் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பொன்னிறம் ஆகும்வரை கவனமாக கையாளவும். உங்கள் மொபைலை சுட்சாஃப் செய்வது நல்லது, மற்றும் டிவிட்டரில் தாங்கள் எங்கு இருக்குறீர்கள் என ஸ்டேடஸ் மெசேஜ் விடவேண்டாம். பீட்ரூட் நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி தனியாக எடுத்து ஆறவிடவும். அடுத்ததாக வாங்கிவந்த சர்க்கரையை (அஸ்கா) அதே வாணலியில் போட்டு வறுக்கவும். மக்களே பொறுங்கள்... இது லஞ்சம் வாங்குவதற்கான டிப்ஸ்தான் சந்தேகம் வேண்டாம். இதற்கிடையில் தினமும் பயன்படுத்தும் செருப்பை கொஞ்சம் பிய்த்துக்கொள்ளவும் தேவைக்கு எற்ப தையல்களையும் போட்டுக்கொள்ளவும். இப்போது வதங்கிய பீட்ரூட்டை முகத்தில் தேய்த்துக்கொண்டு, மீதி எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளவும். அடுத்து, கடலைமாவை உங்கள் சால்வையில் தூவி மீதியை சட்டை பையில் போட்டுக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்). நீங்க வறுத்த வறுவலில் பாத்திரம் கரி பிடித்திருக்கும், அதை அப்படியே எடுத்துக்கொண்டு சால்வையை போர்த்திக் கொண்டு போய் உங்களுக்குப் பிடித்தமான பஸ் ஸ்டாண்டின் முனையில் முன்னர் கூறிய செருப்புடன் நிற்கவும். உங்களை சுற்றி முறைக்கும் நாய்களுக்கு பிஸ்கெட் துண்டங்களைப் போட்டு விஷ்வாசப்படுத்துங்கள். உங்களுக்கு லஞ்சமாக நாணயங்கள் உங்கள் பத்திரத்தில் விழும்; சீக்கிரமாக எண்ணி கைபடாமல் பையில் போட்டுக்கொள்ளுங்கள். லஞ்சம் போடாதவரை கோபமாகவும், போட்டவரை மகிழ்ச்சியாகவும் பார்த்து சிரியுங்கள். பழைய பிச்சைக்காரர்கள் உங்களை விரட்டினால் பையிலுள்ள கடலை மாவை இரண்டு விரலால் அவர்களின் கண்களில் வீசி பாதுகாத்துக் கொள்ளுங்கள். போலீஸ் யாராவது உங்களை பிடிக்க முயற்சித்தால் சால்வையை தூக்கிப் போட்டு உடம்பில் உள்ள எண்ணெய்யால் தப்பித்துக்கொள்ளுங்கள். இந்த முறையால் லஞ்ச ஒழிப்பு துறையில் நீங்கள் சிக்கமாட்டீர்கள். . . . என்னங்க அந்த உப்பு எதுக்குன்னு கேட்குறீங்களா? அதை நீங்க சோற்றில் போட்டுச் சாப்பிடத்தான்!! * நன்றி :http://neechalkaran.blogspot.com


வலைப்பூவில் தேட

நண்பர்கள்

பார்வையாளர்கள்

என்னை பற்றி

My photo
சின்ன சின்ன மாற்றங்களுக்காக எந்தன் சிறு முயற்சி

பதிவுகள்