செய்தி : சென்னை மாநகரில் ஜூன் '6 முதல் பிச்சை எடுக்க தடை ....................... பிச்சை எடுக்குரதுன்னா என்னா சார் ? கோவில், தர்கா , சிக்னல் போன்ற இடங்களில் இனாமாக காசு கேட்பது தான் பிச்சை.
இனிமே இந்த மாதிரி பிச்சை எடுப்பது சட்டப்படி தப்பு , ஆனா இலவச கலர் TV , இலவச வேஷ்டி சேலை , இலவச சைக்கிள், இலவச பொங்கல் சமையல் பொருட்கள் , இலவச மின்சாரம் , இலவச நிலம் என பிச்சை போட்டுக்கொண்டே இருப்பார்கள் .
அட பன்னாட பரதேசி மானங்கெட்ட , மடப்பய மறத்தமிழ் மக்களே இதெல்லாம் எவன் வீட்டு காசு? , எதுவும் அவுங்க சொந்த காசு கிடையாது, எல்லாம் நம்ம காசு. கடை தேங்காய எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைத்த கதையா உங்க காச எடுத்து உங்களுக்கே பிச்சை போடுறாங்க .
அரசாங்கமே பிச்சை எடுப்பது தப்பு என்றால் பிச்சை போடுவது அதைவிட தவறு , எதையும் பிச்சை போடாம மக்களுக்கு வாங்கும் சக்தியை அதிகப்படுத்து , விலைவாசியை குறைத்து கட்டுக்குள் வை . தனி மனித வருமானத்தை மிக மிக அதிகமாக்கு , முடியாதது எதுவும் இல்லை ,
வருடம் 500 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கி வந்த ரயில்வே துறை தற்போது வருடம் 1000 கோடிக்கு மேல் லாபத்தில் இயங்கி வருகிறது .(அடடா.... அதுக்கு காரணம் நம்ம லல்லு தான்னு யாரும் தப்பா எடுத்துகாதிக பிறகு லல்லு ரொம்ப வருத்தபடுவாறு , எல்லாம் I.A.S எனும் மூன்றேழுத்து செய்த வேலை , இதை சுதந்திரமாக செயல் பட விட்டால் எல்லாம் முடியும் )
36 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கினால் , அதை உற்பத்தி செய்யும் உழவருக்கு 4 ரூபாய் தான் போய் சேருகிறது , ஏன் இவ்வளவு பெரிய்ய வித்தியாசம்? இதை முதலில் சரி செய்தாலே எதையும் யாருக்கும் பிச்சை போட தேவையில்லை , அவர்களுக்கு தேவையானதை அவர்களே வாங்கிகொள்வார்கள்.
யோசி அரசாங்கமே , யோசி ????? சார் , அதெல்லாம் விடு சார் , வர்ற டிசம்பர்ல எலக்சன் வரப்போகுதாம் , ஏன்னா? 1991 மற்றும் 2001 A.D.M.K ஆட்சிக்கு வந்தாங்களாம் , அடுத்த வருஷம் 2011 சென்டிமென்ட்டா எதுக்கு வில்லங்கம்முன்னு இந்த வருஷ கடைசிலே ஏலேக்க்சன் வைக்க போறாங்களாம் .
அப்ப என்ன பிச்சை போடுவாங்க ?